திருப்பூர் அருகே சாலை விபத்து - கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பலி
" alt="" aria-hidden="true" />

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  உள்பட 5 பேர்  பலியாகினர்.




 

கல்லூரி மாணவர்கள் சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.  நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.