மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்...

இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சக்தி, ஆட்சியர் அலுவலகம் வாசலிருந்த டிரான்ஸ்பார் ஒன்றின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ந்துபோய் சக்தியைச் சமாதானம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், மனைவி தற்கொலை செய்து கொண்ட துயரத்திலிருந்து மீள முடியாத சக்தி டிரான்ஸ்பார்மரிலிருந்த கம்பி ஒன்றைப் பிடித்துள்ளார்.

அந்த கம்பியைப் பிடித்தபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து சக்தி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் சுயநினைவை இழந்த சக்தி டிரான்பார்மரிலிருந்து கீழே சரிந்தார். கீழே விழுந்த சக்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்