லேபாக்க்ஷி கோயில் – இராமாயணத்தின் தோற்றம்

ராமாயண இதிகாசத்தில் ராமருடைய மனைவியான சீதையை இலங்கை மன்னன் இராவணன் வான்வழியாக கவர்ந்த சென்றதாக விவரிக்கப்பட்டுள்ளது.


சீதாதேவியை காப்பாற்ற வந்த ஜடாயூ என்கிற பறவை இராவணேஸ்வரனின் வாளால் காயப்பட்டு ஒரு குன்றின் மேல் விழுந்தது.


சீதையை தேடி வந்த ராமர் ஜடாயுவை சந்தித்தபோது முதல் வார்த்தைகளாக இதை சொல்கிறார் 'லே பக்க்ஷி ' அதாவது 'எழுந்திடு பறவையே' என்பது இதன் பொருளாகும். அன்று முதற்கொண்டு இந்த இடம் லேபாக்க்ஷி என்று பெயர் பெற்றது.


லேபாக்க்ஷி பெங்களூரில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் ஹிந்துப்பூரிலிருந்து வெறும் 15 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இது வரலாற்று மற்றும் கட்டிடக்கலையின் முக்கியத்துவம் கொண்ட ஒரு சிறிய கிராமமாகும்.


1336 - 1646 ஆம் ஆண்டுகளுக்கு இடையே விஜயநகர பேரரசின் ஆட்சியின் போது சிவன் விஷ்ணு மற்றும் வீரபத்திரருக்கு இங்கே ஆலயங்கள் கட்டப்பட்டது.


இந்தக் கோயில்களை வீரண்ணா விருபண்ணா என்கிற இரண்டு சகோதரர்கள் வடிவமைத்தனர். இந்தக் கோயில் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டது. தற்போது லேபாக்க்ஷி கோயில் என்று அறியப்படுகிறது. விஜயநகர கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயிலில் பல வியக்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன.